சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதன் வீரியமும் பரவும் வேகமும் நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கின்றது.
தமிழகத்திலும் தொற்றின் அளவு கட்டுக்கடங்காமல் உள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க அரசு அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா தொற்றுநோய் (Coronavirus) வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அனைத்து தரப்பினரும் இதன் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் மாணவர்களும் அடங்குவர். மற்ற மாணவர்களுக்கு ஒரு வித பிரச்சனை என்றால், பொதுத்தேர்வுகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பலவித அழுத்தங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை (Board Exams) எதிர்கொண்டிருக்கும் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் படுத்தும் வகையில், வாட்ஸ் ஆப் மூலம் அலகுத் தெர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு முன்னர் மாணவர்களுக்கு உதவும் வகையில், அலகுத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ALSO READ: ஆல்பாஸ் கிடையாது; மாணவர்களின் எதிர்காலமே எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
'வாட்ஸ் ஆப் மூலம், மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் ஆசிரியர்கள் வினாத்தாள்களை அனுப்புவார்கள். மாணவர்கள் வினாக்களுக்கான விடியயை எழுதி, அந்த குழுவிலேயே விடைத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்களை வாட்ஸ் அப் மூலம் வழங்க வேண்டும். இந்த குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடப்படவோ பரிமாற்றப்படவோ கூடாது.' என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரக்ளுக்கான பொதுத்தேர்வு ஆகியவை பற்றி ஆலோசிக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) மே 12 அன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். இந்த ஆண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும், கண்டிப்பாக ரத்து செய்யப்படாது என்று கூறினார் கல்வித்துறை அமைச்சர். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றார் அவர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மனதில் தேர்வுகள் நடக்குமா நடக்காதா என்று இருந்த சந்தேகத்திற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR