தென் மாநிலங்கள் இருளில் மூழ்கலாம்! பயமுறுத்தும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

Neyveli Coal Crisis: நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரி வெட்டுவதற்கு போதிய நிலப்பரப்பு இல்லாததால், இரண்டு சுரங்கங்களிலும் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2022, 03:28 PM IST
  • நெய்வேலி சுரங்க விரிவாக்க முட்டுக்கட்டை
  • நிலக்கரி சுரங்கங்களில் போதிய நிலப்பரப்பு இல்லாததால் சிக்கல்
  • நிலக்கரி வெட்டும் பணிகள் முடக்கம்
தென் மாநிலங்கள் இருளில் மூழ்கலாம்! பயமுறுத்தும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் title=

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின், இரண்டு சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மின்சார உற்பத்தியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கத்தின் மூலமாக நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்றின் விரிவாக்கம், சுரங்கம் இரண்டு என மூன்று சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு சுரங்கத்திலும், தலா பத்தாயிரம் முதல், பதினைந்தாயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சார உற்பத்திக்காக அனல் மின் நிலையத்திற்கு (Thermal Power Station) அனுப்பி எரிய வைக்கப்படுவது வழக்கம். 

நெய்வேலியில் அமைந்துள்ள நான்கு அனல் மின் நிலையங்களில் உள்ள, 13 யூனிட்டிகளில், நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 ஆயிரம் வரை நிலக்கரி எரிக்கப்பட்டு, 2450 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினசரி, 45 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட நிலக்கரி வெட்டப்பட்டு, 35 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவதால் தென் மாநிலங்கள் அனைத்திற்கும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,  தற்போது சுரங்கம் ஒன்று மற்றும் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தப்பட்டது உள்ளதால், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

நிலக்கரி வெட்டுவதற்கு போதிய நிலப்பரப்பு இல்லாததால், சுரங்கம் 1, 2 என இரண்டு சுரங்கங்களிலும் நிலக்கரி வெட்டும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின்சார உற்பத்திக்காக, என்எல்சி நிர்வாகம், சுரங்கம் ஒன்றின் விரிவாக்கத்தில் இருந்து, நிலக்கரியை வெட்டி வருவதாகவும், வெட்டப்பட்ட நிலக்கரிகள், லாரிகள், கன்வயர் பெல்ட் மூலமாக அனல் மின் நிலையத்திற்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | Ludhiana Court Blast : தீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி கைது!

ஆனால், சுமார் 40,000 மெட்ரிக் டன், நிலக்கரி மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 15,000 மெட்ரிக் டன்  நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு மாதத்திற்குள், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்சார உற்பத்தி செய்ய முடியாமல், நிறுத்தப்படும் சூழல் உள்ளதாக நெய்வேலி பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கம் ஒன்று மற்றும் சுரங்கம் இரண்டு ஆகிய இரண்டு சுரங்கங்களிலும், நிலக்கரி வெட்ட வேண்டும் என்றால், அதன் அருகாமையில் உள்ள அகிலாண்டபுரம், கல்லுக்குழி, தென்குத்து, வடக்கு மேலூர், அம்மேரி, கறி வெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஆனால் குறிப்பிட்ட இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஏக்கருக்கு ஒரு கோடி மற்றும் நிரந்தர வேலை தராத வரை, தங்களது நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் என உறுதியாக உள்ளனர்.

இந்தச் சூழலில், என்எல்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பதாகவும், கடலூர் மாவட்ட ஆட்சியர், கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துக்களை காதில் வாங்காமல், நிலத்தை கையகப்படுத்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும்,  தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க என்எல்சி நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் கைகோர்த்துக் கொண்டு விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

நிலக்கரி பற்றாக்குறையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் இருளில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News