ஒருவரின் நிறம், உடல், சாதி, மதம் உள்ளிட்டவைக் குறித்து பொதுவெளியில் பேசி இழிவுப்படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும். ஆனாலும் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பொதுவெளியில் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. உதகை நஞ்சநாடு அருகே உள்ள கப்பத்தொரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கப்பதொரை கிராமத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர் மாற்றுத்திறளானி முருகன். இவருடைய உறவினரை, அதே பகுதியில் கடைவைத்து நடத்தி வரும் திமுகவின் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் சாகுல் ஹமீது மற்றும் அவரது மகன் ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Viral Video: பணம் கேட்டு மிரட்டல்... திமுக கவுன்சிலரின் கணவரை தெறிக்கவிட்ட பெண்!
இதுகுறித்து கேட்பதற்காக மாற்றுத்திறனாளி முருகன், சாகுல் ஹமீதிடம் தனது உறவினரை தகாத வார்த்தையில் திட்டியது ஏன் ? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு திமுக பிரமுகர் சாகுல் ஹமீது மற்றும் அவரது மகன் ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர் முருகனை சாதிப் பெயர் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள இரும்புக் கம்பியால் முருகனின் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகன், உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியது மட்டுமல்லாமல் தன்னை தாக்கிய தெற்கு ஒன்றிய அமைப்பாளர் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | போக்குவரத்துத்துறையிலிருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR