அண்ணாமலையிடம் பம்முகிறார்களா திமுக அமைச்சர்கள் ?

Annamalai Press Meet : ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்த அண்ணாமலை. திமுக அமைச்சர்கள் ரகசியமாக செய்யும் செயல் என்ன ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 2, 2022, 10:39 AM IST
  • அண்ணாமலையிடம் பம்முகிறார்களா திமுக அமைச்சர்கள் ?
  • ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவிப்பு
  • ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சி - அண்ணாமலை
அண்ணாமலையிடம் பம்முகிறார்களா திமுக அமைச்சர்கள் ? title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூரில் நடைபெற்றது‌. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய பேட்டியின் சாராம்சத்தின் சில துளிகள்.

திமுக கூட்டத்திற்கு பிரியாணி கொடுத்து அழைக்கும் அமைச்சர் சக்கரபாணி,  பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக பிரியாணி பொட்டலம் வழங்கியுள்ளார். இதுவே அரசியல் களம் மாறியுள்ளதற்கு சாட்சி

தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. வாக்குறுதியை எழுதிய டி.ஆர்.பாலுவிடம்தான் கேட்கவேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படி என்றால் டி.ஆர்.பாலுவை முதல்வர் ஆக்குங்கள். அதை பாஜக வரவேற்கும். 

மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார் - அண்ணாமலை

எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் என்ன நடந்தாலும்  அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. 

ஓராண்டு காலத்தில் அதிக பொய் பேசி சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின். அதுதான் அவரது ஒருவருட சாதனை. அவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சர்கள்  வேண்டுமென்றே  பேசிவருகிறார்கள். 

ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாக அறிவித்தவுடன் நான்கு தமிழக அமைச்சர்கள் தனக்கு தூது விட்டுள்ளனர். ‘எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ; கோபாலபுரம் தெரிவித்ததால் மட்டுமே கையெழுத்து போட்டோம்’ என தெரிவித்தனர். 

‌இந்தியாவில் உள்ள நிதி அமைச்சர்களிலேயே தமிழக நிதிஅமைச்சர்தான் அமெரிக்க வங்கிகளை திவால் செய்துவிட்டு வந்தவர். அந்தப் பெருமை அவருக்கு உண்டு. அவர் கொடுத்த பொய்யான தரவுகளை வைத்து பிரதமர் முன்பு பேசி தமிழகத்திற்கு அவமதிப்பை பெற்றுதந்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘மத்திய அரசு’. ஆட்சிக்கு வந்த பின்பு ‘ஒன்றிய அரசு’ 

மேலும் படிக்க | கார்த்திக் கோபிநாத் கைது முதல் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டர் வரை.!

திமுகவின் கோட்டை எனப் பெருமை பேசும் சென்னையில் 50 ஆயிரம் பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு கொடுத்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரவுடிகள் தைரியமாக நடமாடுகின்றனர். ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளியை முதல்வர் நேரில் சென்று உச்சி முகர்ந்ததுள்ளார். முதலமைச்சருக்கு புத்தி உள்ளதா ? என மக்கள் கேட்கின்றனர். 

உதயநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்து தள்ளுவது 23ம் புலிகேசியை பார்ப்பது போலுள்ளது. மகன், மருமகனை தொடர்ந்து மூன்றாவதாக முதல்வரது மனைவி துர்கா ஸ்டாலினும் புதிய பவர் சென்டராக உருவாகியுள்ளார். 

தமிழகத்திற்கு 14ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக பொய் பேசி, அதனை கொடுத்தால் பெட்ரொல் விலையை குறைப்பதாக தெரிவித்தனர். தற்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய 9 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் முழுவதும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. இப்போது மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பார்களா ?.!

இவ்வாறு அண்ணாமலை அந்தக் கூட்டதில் பேசினார். 

மேலும் படிக்க | ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல: அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News