இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக - திமுக கட்சிகள்

இன்று தமிழகத்தின் இருதுருவங்களான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 19, 2019, 10:04 AM IST
இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக - திமுக கட்சிகள்  title=

அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ள மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலை சந்திக்க தமிழகம், புதுச்சேரியில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் தேசிய கட்சிகள் உட்பட தமிழக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் திமுக, அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 20 தொகுதிக்கான வேட்பாளர்களையும் இரண்டு கட்சிகளும் அறிவித்துவிட்டது. அதேபோல இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களை கவரவும், அவர்களுக்கு ஆசை வாரத்தை காட்டியும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்க அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முன்பாக, தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அப்படி அறிக்கையை வெளியிட்டு தான் கொடுத்த வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றிய கட்சி ஒன்று நாட்டில் உள்ளதா? என்று பார்த்தால், வரலாறு முழுக்க அப்படி ஒரு கட்சி இல்லை என்றே தான் கூறவேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தின் இருதுருவங்களான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். யார் இலவசம், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Trending News