கஜா புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு...

கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2018, 09:54 AM IST
கஜா புயல் எதிரொலி: எந்தெந்த  மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு...  title=

கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை....

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றி, மின்கம்பங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணியில் அரசும், பொதுமக்களும், தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை, தஞ்சையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வட்டத்தில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News