கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கனிமொழி - திமுக தொண்டர்கள் உற்சாகம்

மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2021, 05:54 PM IST
  • கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.
  • முழுக் கவச உடையுடன் வாக்குசாவடிக்கு வந்த கனிமொழி எம்.பி. ஓட்டு போட்டார்.
  • கொரோனா தொற்று (COVID-19) இருப்பது சனிக்கிழமை (ஏப்ரல் 3) உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கனிமொழி - திமுக தொண்டர்கள் உற்சாகம் title=

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு கொரோனா தொற்று (COVID-19) இருப்பது சனிக்கிழமை (ஏப்ரல் 3) உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்தையும் ரத்து செய்தார். நேற்று தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்றினார். 

நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம்  முழுக் கவச உடையுடன் வாக்குசாவடிக்கு வந்த கனிமொழி எம்.பி. (DMK MP Kanimozhi), தனது வாக்கை செலுத்தினார். அதன் பிறகு மருத்துவமனைக்குச் சென்றார். இந்தமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் தனது வாக்கை செலுத்துவதற்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் பிபிஇ கிட் (PPE kit) அணிந்து வந்து வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைமையிலான கூட்டணிக்கு (DMK Alliance) ஆதரவாக கடந்த ஒரு மாதம் காலமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்  கனிமொழி. பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். கடைசியாக பாளையங்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவருக்கு, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

ALSO READ | திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வீடு திரும்பிய அவரை மகளிர் அணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கனிமொழி திமுக மகளிர் அணிச் செயலாளர் (DMK's Women's wing secretary) என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News