நிற்காமல் போன அரசுப் பேருந்து - கல்லெறிந்த மாணவர்கள்!

பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் போனதால் பள்ளி மாணவர்கள் கல் எறிந்து கண்ணாடியை உடைத்தனர்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 8, 2022, 03:30 PM IST
  • கூட்ட நெரிசலால் கிராமப் புறங்களில் நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்து
  • எல்லெறிந்து கண்ணாடிகளை உடைக்கும் பள்ளி மாணவர்கள்
  • வன்முறைப் பாதையை தேர்ந்தெடுக்கும் அபாயத்தில் மாணவர்கள்
நிற்காமல் போன அரசுப் பேருந்து - கல்லெறிந்த மாணவர்கள்!  title=

நகரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளே போதுமான அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வரும் மாணவர்கள் மத்தியில், கிராமப் புற மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள உதயமாம்பட்டு கிராமத்திலிருந்து  சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தியாகதுருகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். குறைந்த அளவில் அரசுப் பேருந்து இயக்கப்படுவதால் இந்த வழித்தடத்தில் மாணவர்களின் கூட்டம் அலைமோதும். அதையூரிலிருந்து வழித்தட எண் 2 கூடிய அரசு பேருந்து காலை 8 மணிக்கு அதையூரிலிருந்து புறப்பட்டு, கல்சிறுநாகலூர், குன்னியூர், சிக்காடு, உதயமாம்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தியாகதுருகத்திற்கு இந்தப் பேருந்து சென்றடைகிறது. வழக்கம்போல் அதையூரிலிருந்து கிளம்பிய அரசுப் பேருந்து, உதயமாம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் போனது. 

மேலும் படிக்க | பேருந்து உள்ளே ஏறாமல் இருந்த இளைஞர்களை காவல் வண்டியில் ஏற்றிய போலீஸ்!

இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், தேங்காய் மட்டையை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை தாக்கியுள்ளனர் . இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து முற்றிலும் சேதமானது. மேலும் பேருந்தில் அதிகப்படியான கூட்டநெரிசல் காரணமாகவே உதயமாம்பட்டு கிராமத்தில் சரி வர பேருந்து நிற்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் இறக்கிவிடப்பட்டு அரசு பேருந்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தியாகதுருகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கல்சிறுநாகளூர், குன்னியூர் சிக்காடு, அதையூர் போன்ற கிராமங்களிலேயே கூட்டம் ஏறிவிடுவதாகவும், இந்த கூட்ட நெரிசலால் உதயமாம்பட்டு கிராமத்து மக்கள் பேருந்தில் ஏற முடியாதபடி கூட்டம் காணப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். குறைவான அளவில் பேருந்து இயக்கப்படுவதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுவதால் உடனடியாக இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். 

மேலும் படிக்க | நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்!

அதுமட்டுமல்லாமல் இந்தப் பிரச்சனையால், தியாகதுருகம், சின்னசேலம், கல்வராயன் மலைப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்தின் படியில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு மட்டுமே வீடுகளில் இருந்து கிளம்புகின்றனர். பள்ளிக்கும், வீட்டிற்கும் இடையில் ‘கல்லை’ ஏந்தி பேருந்தின் கண்ணாடியை உடைக்கும் அளவுக்கான மனநிலை வரை மாணவர்கள் சென்றிருக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டால்தான் எல்லாம் கிடைக்கும் என்ற ஆபத்தான சிந்தனைப்போக்கை மாணவர்கள் இங்கிருந்து கற்றுக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. மாணவர்களின் கையில் இருக்கும் அந்தக் ‘கல்லை’ பிடுங்குவதற்கான நடவடிக்கையில் இறங்குமா தமிழக அரசு ?!   

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News