பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; ஆளுநர் மாளிகை விளக்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2018, 01:01 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; ஆளுநர் மாளிகை விளக்கம்! title=

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது!

இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஊகத்தின் அடிப்படையில் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைப்பெற்று வருகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்திற்கு அப்படி ஏதும் அறிக்கை அனுப்பப்படவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை விடுதலை செய்வது என்பது அரசமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆய்வு செய்ய வேண்டிய சிக்கலான விவகாரம்.

இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் தமிழக அரசிடமிருந்து நேற்றைய தினம் தான் பெறப்பட்டன என்றும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆவணங்கள் அனைத்தும் கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமாக, நேர்மையாகவும் நியாயமாகவும் முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

Trending News