பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா சாலையில் சிம்சன் பெரியார் சிலைக்கு முன்பே திமுக, திக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சுப வீரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அவரது உருவ பொம்மையை கட்சியினர் எரித்தனர். மேலும் எச் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் போலீஸார் கைது செய்தனர்.
சமூக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Chennai: DMK workers protest in Saidapet against BJP leader H Raja's comments on #Periyar pic.twitter.com/7dIZY3Qh9E
— ANI (@ANI) March 7, 2018