தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது.,
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை (Rain) பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு (Haevy Rain) வாய்ப்பு உள்ளது.
ALSO READ | Weather Forecast: தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம்
சென்னையில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மே 21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் உதவையில் 4 செ.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 3 செ.மீ., பேரையூர், கலட்டி, நிலக்கோட்டையில் தலா 2 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR