தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகம் தவித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக தமிகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கா விட்டாலும் மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்துள்ளது. இந்த நிலையில் மழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகரை பொறுத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம் காணப்படும். இங்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.