தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரத்தில் வெயில் கொளுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் வாடும் மக்களின் மனதிற்கு இதமான செய்தியாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் எனினும், கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாலை முதல் காலை வரை அதிக அளவில் வெப்பநிலை இருக்கலாம் என கூறியுள்ளது.
ALSO READ | அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை!
தமிழகத்தில் கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கியது. பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.
வருகிற மே 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற செய்தி மக்களுக்கு ஆறுதலை அளிக்கும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்து வரும் நிலையில் கத்திரி வெயில் நிலவும் நாட்களில் மற்ற நாட்களை விட வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில், கோடை மழை வெப்ப நிலையை சற்று குறைத்து மக்களுக்கு சிறது நிவாரணத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | ஆட்சியமைக்க உரிமை கோரும் மு.க.ஸ்டாலின் - நாளை ஆளுநரை சந்திக்கிறார்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR