2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி அன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே திருவிழா காரணமாக கச்சநத்தம் கிராமமே களைகட்டிருந்தது. அப்போது திருவிழாவில் மக்களோடு மக்களாக திருவிழாவாக ஊருக்குள் புகுந்த கும்பல் எல்லோர் மீதும் தாக்குதல் நடத்தியது.
மேலும் படிக்க | தமிழக அரசுக்கு பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பம் வைக்கும் கோரிக்கைகள்.!
அரிவாளால் வெட்டியும், வீடுகளைச் சேதப்படுத்தியும் இருந்த அவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் , சந்திரசேகர் , சண்முகநாதன் ஆகியோரை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். தமிழகமே பதறிய இந்த மூவர் படுகொலைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவத்தில் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் தலைமறைவானார். மூன்று பேர் சிறார் என்பதால் மற்ற 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைதொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், 27 பேருமே குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டனர். ஆனால், தண்டனை விபரங்கள் மட்டும் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். கடந்த 3ம் தேதி காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றவாளிகளிடம் நீதிபதி முத்துக்குமரன் வழக்கு குறித்து விசாரணை செய்தார்.
பின்னர் சிவகங்கை நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதிக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். பின்னர் 5 ஆம் தேதி 27 பேரின் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வழக்கில், எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். பொதுவாக, இதுமாதிரியான கொலை வழக்குகள் தீர்ப்புகள் வழங்கப்படாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில், இந்த வழக்கு நான்கே ஆண்டுகளில் விரைவாக விசாரணை செய்து தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகள் விபரம்:
1.சுமன்
2.அருண் அருண்குமார்
3.சந்திரகுமார்
4.அக்னி ராஜ்
5.ராஜேஸ்வரன்
6.இளையராஜா
7.கனித் என்ற கனித்குமார்
8.கருப்பு ராஜா என்ற முனியாண்டி சாமி
9.மைக்கேல் முனியாண்டி
10.ஒட்டகுலத்தான் என்ற முனியாண்டி
11.ராமகிருஷ்ணன்
12.மீனாட்சி
13.செல்வி
14.கருப்பையா
15.சுரேஷ்குமார்
16.சின்னு
17.செல்லம்மாள்
18.முத்தையா என்ற முத்து சேர்வை
19.முத்துச்செல்வம்
20. முத்தீஸ்வரன் என்ற முத்து முனீஸ்வரன்
21.ராமச்சந்திரன்
22.சுள்ளான் கருப்பையா
23.மாயச்சாமி
24.பிரசாத் என்ற அருண்பாண்டி (உயிரிழப்பு)
25.ரவி என்ற முகிலன்
26.ரவி
27.அருள் நவீன்
28.தவிடு என்ற கார்த்திக்
29.மட்டி வாயன் என்ற முத்துமணி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ