கோவை தெற்கு தொகுதி: தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் கமல் ஹாசன்

தமிழகத்தில் காலை முதலே திமுக முன்னணியில் இருந்து வருகிறது. பல தொகுதிகளில் பல நட்சத்திர வேட்பாளர்கள் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 05:38 PM IST
  • கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை.
  • தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
  • கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி.
கோவை தெற்கு தொகுதி: தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் கமல் ஹாசன்  title=

தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பல தொகுதிகளில் இறுதி முடிவுகளும் வந்து விட்டன. 

தமிழகத்தில் காலை முதலே திமுக முன்னணியில் இருந்து வருகிறது. பல தொகுதிகளில் பல நட்சத்திர வேட்பாளர்கள் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.   

மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என எண்ணப்பட்ட பல கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றியடைய முடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

சில கட்சிகளின் தலைவர்களும் கூட பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்.

பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தாலும் திராவிடக் கட்சிகளை அசைக்க முடியவில்லை. 

எனினும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் மட்டும் அவரது தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.   

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசன், 36,885 வாக்குகள் பெற்று, முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 35,503 வாக்குகளுடன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இங்கு பாஜக சார்பாக வானதி ஸ்ரீநிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக பெரும்பான்மையான இடங்களில் நல்ல முன்னிலையில் உள்ளது. சென்னையை கிட்டத்தட்ட திமுக அள்ளிவிட்டது என்றே கூறலாம். இதற்கிடையில், தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிகமுவின் அறிவுடைநம்பியை விட, சுமார் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் நீலமேகம்.

கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சின்னத்துரை வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஜெயபாரதியைவிட 11,000 வாக்குகளை சின்னத்துறை கூடுதலாக பெற்றுள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News