2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024 ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கரூர் மக்களவைத் தொகுதி (Karur Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் கரூர் 23வது தொகுதியாகும். 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தற்போது கரூர் மக்களவைத் தொகுதியில் வேடச்சந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
கரூர் தொகுதியில் மொத்தம் 14,21,494 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,89,900 பேர், பெண் வாக்காளர்கள் 7,31,502 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 92 பேர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஜோதிமணி 1,32,238 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எல்.தங்கவேல் 99,928 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பா.ஜ.க கட்சி சார்பாக செந்தில்நாதன் போட்டியிட்ட நிலையில், 25,653 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
போட்டியிடுட்ட வேட்பாளர்கள்
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க சார்பில் கே.ஆர்.எல்.தங்கவேல் போட்டியிடுகிறார்.
பா.ஜ.க- கட்சி சார்பாக செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக ரெ.கருப்பையா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!
கடந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜோதிமணி அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரையை சுமார் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில், அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை 5,40,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், அ.தி.மு.க கட்சி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2004ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த தேர்தலில் 2019ல் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வென்றது.
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ