எங்கள பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? பாஜகவை தாக்கிய இபிஎஸ் - கொண்டாடிய தொண்டர்கள்

Edappadi Palanisamy Attacks BJP: பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான் என அதிமுகவை விமர்சித்த பாஜகவின் ராம ஸ்ரீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2024, 08:55 PM IST
  • பாஜகவை பார்த்து அதிமுக பயப்பட வேண்டிய அவசியமில்லை - இபிஎஸ்
  • பாஜக போல் வெற்று விளம்பர அரசியல் செய்யும் கட்சிகள் தேர்தலுக்கு பின் காணாமல் போகும் - இபிஎஸ்
  • இனி தமிழகத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும் எதிர்ப்போம் - இபிஎஸ்
எங்கள பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? பாஜகவை தாக்கிய இபிஎஸ் - கொண்டாடிய தொண்டர்கள் title=

Edappadi Palanisamy Attacks BJP: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிதம்பரம் புறவழிச்சாலையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் கே.செம்மலை, கே.ஏ.ஜெயபால், ஓ.எஸ்.மணியன், தாமோதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "வெற்றி கூட்டணியின் சார்பாக சந்திரகாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரையே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திமுக ஒரு கம்பெனி

திமுக என்பது கட்சி அல்ல அது கம்பெனி. அதற்கு முதலாளி ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்தான். அண்ணா திமுக மட்டும் தான் மக்களுக்காக தொண்டர்களுக்கான துவங்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். அதனை அம்மா கட்டி காத்து வளர்த்தார், அவர்கள் இருவரும் நமக்கு தெய்வங்கள்.

மேலும் படிக்க | பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்திலேயே வலிமையான கட்சி அதிமுகதான். 2 கோடி தொண்டர்கள் உள்ளார்கள். அண்ணா திமுக என்ற கட்சி இருப்பதனால்தான் திமுக என்கிற கட்சியை இயக்க முடியாமல் தடுத்து நிறுத்தி உள்ளோம். தேர்தல் நேரத்தில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் செல்லும் இடமெல்லாம் திட்டமிட்டு அதிமுகவையும் என்னை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

'நான் என்றுமே தொண்டன்'

2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் எனக்கு பொதுச்செயலாளர் என்ற வாய்ப்பு உங்கள் மூலம் தரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக இருப்பதை பெருமையாக கருதவில்லை. உங்களில் ஒருவனாக இருப்பதைத்தான் பெருமையாக கருதுகிறேன், அதை நினைத்து தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திமுகவைப் போல் தலைமை தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் ஆள் நான் இல்லை. நான் தொண்டன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். தலைவன் எப்போது வேண்டுமானாலும் மாறலாம், தொண்டன் தான் நிரந்தரமாக இருப்பான். 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்ததால்தான் தமிழகம் முதல் மாநிலமாக மாறியது. இந்தியாவிலே எத்தனை கட்சிகள் உள்ளன, தமிழகத்திலும் எத்தனையோ கட்சிகள் உள்ளன ஆனால் ஒரு சாதாரண தொண்டனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என கேள்வி எழுப்பினார்.

திமுகவுக்கு எதிரான மனநிலை

சாதாரண கிளைச் செயலாளர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே முடியும். திமுகவில் அப்படி இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு காலத்தில் திமுகவை எப்பொழுது வீட்டிற்கு அனுப்பிவீர்கள் என்று மக்கள் பேசும் நிலை இப்போது உள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தை அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொடுத்தோம்.

முதலமைச்சர் பிரச்சாரத்தின் போது அதிமுகவின் பத்தாண்டு வாழ காட்சி இருண்ட காலம் என்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது அவரது பேச்சு. கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை நான் பட்டியலிடுகிறேன், நீங்கள் என்ன செய்தீர்கள்?

மேலும் படிக்க | சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

திமுகவின் சரித்திரம் முடியப்போகிறது

நீங்கள் மக்களை சந்திப்பதில்லை, மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஒரு பொம்மை முதலமைச்சர் ஆக உள்ளீர்கள், எதுவுமே தெரியாத முதலமைச்சர். அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அவரது வீட்டில் உள்ள பிரச்சனைதான் அவருக்கு கவலையாக உள்ளது. திமுக ஜெயிக்கப் போவதில்லை இத்தோட திமுகவின் சரித்திரம் முடிய போகிறது.

உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பார்க்கிறார்கள். இது என்ன மன்னர் பரம்பரையா, இது ஜனநாயக நாடு. நீங்கள் உங்கள் கட்சியில் எல்லோரையும் அடிமையாக வைத்துள்ளீர்கள். அங்கே யாருமே தலைமைக்கு வரவே முடியாது. திமுகவின் அடுத்த தலைமை நான் தான் என்று யாரேனும் ஒருவர் கூறினால் அடுத்த நிமிடமே அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்து தூக்கிவிடுவார்கள். ஆனால் அதிமுகவில் அப்படியில்லை நமது கட்சி ஜனநாயக கட்சி.

திமுகவின் இரட்டை போராட்டம்

தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துவிட்டது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை கொலை செய்து கொள்ளையடித்து செல்கிறார்கள் மளிகை சாமான்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது போதை பொருள் மீட்பவர்களை எல்லாம் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் கண்துடைப்பாக ஒரு செய்தியை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள் பள்ளிக்கு அருகிலேயே கல்லூரிக்கு அருகிலேயே கஞ்சாவிற்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது.

மேலும் படிக்க | பல்லடத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை

இனி தமிழகத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை கடுமையாக எதிர்ப்போம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக. 

பாஜக ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டது

2026 தேர்தலோடு அதிமுக இருக்காது என பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார். உங்களைப்போல் நாங்கள் வெற்று விளம்பர அரசியல் செய்யும் கட்சி அல்ல. தமிழகத்தில் 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரே மாபெரும் இயக்கம் அதிமுக. பாஜகவை பார்த்து அதிமுக பயப்பட வேண்டிய அவசியமில்லை.

உங்களைப் போன்று வெற்று விளம்பர அரசியல் செய்யும் கட்சிகள் எல்லாம் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். பாரதிய ஜனதா கட்சி சின்னம் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காண்பிக்கப்பட்டது. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற?" என்றார். ஈபிஎஸ் பாஜகவை விமர்சித்து அதிரடியாக பேசியபோது, அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் விசில் அடித்தும், கைதட்டியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பரித்தனர். 

திமுக எதையும் செய்யவில்லை

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் என்எல்சி நிலம் எடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை.  விவசாயிகளின் நிலத்தை பாதுகாப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டு வந்தது அதிமுகதான். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஸ்டாலின்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு பாதுகாப்பாக வேளாண் மண்டலம் என்கிற சட்டத்தை கொண்டு வந்தது அதிமுக.

அதிமுக ஆட்சியின் போது சர்க்கரை ஆலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்று ஆலையை இயக்கும் அவல நிலை உள்ளது. பிறகு எப்படி சர்க்கரை ஆலை லாபத்தில் இயங்கும்ச

கரும்புக்கு ஆதார விலை ஒரு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் தருவதாக கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு குவிந்தாலுக்கு 2500 ரூபாய் தருவதாக சொன்னார்கள், அதையும் செய்யவில்லை.

நாற்பதும் நமதே - இபிஎஸ்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் போது கடலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பட்டியலிட்டு வருகிறார். இபிஎஸ் இருந்தால் யுபிஎஸ் தேவைப்படாது. மயிலாடுதுறை மாவட்டம் மாதிரி கடலூர் மாவட்டம் கருப்பூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட வேண்டிய தடுப்பணை திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். 

இதுபோல் பல்வேறு நலத்திட்ட பணிகளை கிடப்பில் போட்டது திமுக. திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சிதான் மக்கள் விரோத ஆட்சி மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். அதனை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள். 40 நாடாளுமன்ற தொகுதியிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி வெற்றி பெறும்" என பேசினார்.

மேலும் படிக்க | திமுகவினருக்குள் கோஷ்டி மோதல்-பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News