Tamil Nadu Today Latest News Live Updates: 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கியது. சட்டப்பேரவை மரபுப்படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி வேண்டிய நிலையில், தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் அவமதிப்புக்கு உள்ளானதாக கூறி ஆளுநர், அரசு தயாரித்த அந்த உரையை வாசிக்க மறுத்து அவையில் இருந்து வெளியேறினார். தற்போது இந்த கூட்டத்தொடரின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (ஜன. 9) நடைபெறுகிறது. இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை (TN Assembly 2025 Live Updates) இங்கு காணலாம்.
திருப்பதியில் விஷ்ணு நிவாஸம் பகுதியில் வைகுண்ட ஏகாதேசியில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு இலவச டிக்கெட் விநியோகம் நேற்றிரவு நடைபெற்றது. இலவச டிக்கெட்டை வாங்க சுமார் 30 ஆயிரம் பேர் ஒரே வரிசையில் கூடியதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்ததால் திடீர் கூட்ட நெரிசல் (Tirupati Stampede) ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்த நிலையில், 6 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் அடக்கம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Andhra CM Chandrababu Naidu) இன்று திருப்பதிக்கு செல்ல உள்ளார். இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.
பொங்கல் 2025 பண்டிகையை (Pongal 2025) முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) ரேசன் கடைகள் மூலம் இன்று முதல் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. கூடவே, இலவச வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) இன்று காலையில் தொடங்கிவைக்கிறார்.
இவை மட்டுமின்றி உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (ஜன. 9) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.