Live: சென்னை மழை; விஸ்வரூபம் எடுக்கும் அமித்ஷா சர்ச்சை; அஸ்வின் ஓய்வில் குழப்பம் - உடனடி அப்டேட்கள்!

Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், விளையாட்டு, சினிமா, வணிக, அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 19) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2024, 12:43 PM IST
    TN Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு (Chennai Rains) வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் (Amit Shah Controversy), அமித்ஷா பதவி விலகக்கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இன்றைய உள்ளூர், மாநில, தேசிய, சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளையும் இங்கு காணலாம்.

19 December, 2024

  • 12:38 PM

    நாடாளுமன்றத்தில் மோதல்

    Parliament Latest News: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, ​​காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதாப் சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. (முழு விவரம்)

  • 10:02 AM

    இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவாக 85.05 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது

  • 09:47 AM

    நாடாளுமன்ற கூட்டுக்குழு

    Lok Sabha Latest News: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம் பெற்றிருக்கின்றனர்.(முழு விவரம்)

  • 09:45 AM

    சென்னை வந்தார் அஸ்வின்

    ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட நிலையில், சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த அவர் செய்தியாளர்களை வீட்டுக்கு சென்று சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வந்திருந்தனர். 

  • 09:40 AM

    தங்கம் விலை சரிவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. இதன்மூலம், இன்று தங்கம் ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 560 என்ற விலையில் விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்துள்ளது. இதன்மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 70 என்ற விலையில் விற்பனையாகிறது. 

  • 09:38 AM

    விஸ்வரூபம் எடுக்கும அமித்ஷா சர்ச்சை

    அம்பேத்கர் குறித்த சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 11.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டதில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. 

Trending News