தமிழகத்தில் ‘போலியாக’ SBI வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பல் கைது....!!

பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Last Updated : Jul 12, 2020, 10:04 AM IST
    1. பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.
    2. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 473, 469, 484, 109 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ‘போலியாக’ SBI வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பல் கைது....!! title=

பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் போலியாக வங்கி கிளையை நடத்தி வந்த  3 பேர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்ருட்டி எல்.என்.புரம் எஸ்பிஐ வங்கி (SBI) நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியரான சையது கலீல் இவரது மகன் கமால்பாபு என்பவர் எஸ்பிஐ வங்கி (SBI) ., நார்த் பஜார் ‘ என்ற பெயரில் போலியான சலான், வரைவோலை, காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை தயாரித்து வந்துள்ளார். இவர் தன்னை வங்கியின் மேலாளர் என்றும் கூறிக்கொண்டு வங்கி பெயரில் இணையதளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஏப்ரல் மாதத்தில் யாரும் இது பற்றி சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணத்தில், கமல் பாபு, ஏ.குமார் (42), மற்றும் எம்.மாணிக்கம் (52) ஆகியோருடன் இணைந்து போலியாக இத வங்கி கிளையை தொடங்கியுள்ளனர்.

 

READ | SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... MCLR வட்டி விகிதம் குறைப்பு...!

வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர், அந்த போலி வங்கி கிளையிலிருந்து வாங்கிய ரசீதைக் காட்டிய பின்னர், மேலாளரும் பிற அதிகாரிகளும் போலி கிளையை பார்வையிட்டனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக பன்ருட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, இந்த 3 பேரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 473, 469, 484, 109 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர்கள் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விரிவுபடுத்தப்பட்டனர்.

டெபாசிட் கோருவதன் மூலமோ அல்லது கடன்களை எளிதாக்குவதன் மூலமோ அந்த நபர் மக்களை ஏமாற்றிவிட்டாரா என்று கேட்கப்பட்டதற்கு, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் பி.டி.ஐ யிடம், "இல்லை..இது போன்ற புகார் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று கூறினார்.

 

READ | Digital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்

“பாபுவின் பெற்றோர் முன்னாள் எஸ்பிஐ வங்கி (SBI) ஊழியர்கள். சிறு வயதிலிருந்தே, அவர் வங்கியைப் பார்த்து வந்துள்ளார். அதனால், ஒரு வங்கி கிளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொண்டார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தாயார் ஓய்வு பெற்றார். அவரது தந்தை இறந்த பிறகு, அவர் வாரிசு அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் குறித்த நடவடிக்கை தாமதமானதால் விரக்தியடைந்தார். எனவே அவரே ஒரு வங்கியைத் திறக்க முடிவு செய்துள்ளார்.” என்று காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கூறினார்.

Trending News