Digital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் "யோனோ கிளைகளை" (YONO Branch) திறந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2020, 06:37 AM IST
  • நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் "யோனோ கிளைகளை" திறப்பு.
  • வங்கியின் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ இன்ஸ்டா சேவிங் வங்கி கணக்கு சேவையைத் தொடங்கியுள்ளது
Digital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் title=

புது டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் "யோனோ கிளைகளை" (YONO Branch) திறந்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் முறையை (Digital banking) ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். யோனோ (You Only Need One) என்பது எஸ்பிஐயின் டிஜிட்டல் வங்கி பயன்பாடாகும். பி.டி.ஐ (PTI) செய்தியின்படி, பைலட் திட்டத்தின் கீழ் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் யோனோ (YONO) கிளைகளை திறந்து வைத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், யோனோ கிளை வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வங்கி முறைகளை பின்பற்ற ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உதவியுடன் அவர்கள் அனைத்து வங்கி சேவைகளையும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

READ | வெறும் 10 நிமிடத்தில் வீட்டுக்கடன்; SBI வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்...

READ | ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?

வங்கியின் சுய சேவை மையத்தில், வாடிக்கையாளர்கள் காசோலைகளை டெபாசிட் செய்ய, பணத்தை எடுக்க, பணத்தை டெபாசிட் செய்ய மற்றும் பாஸ் புத்தகங்களை அச்சிட 24 மணி நேர ஸ்மார்ட் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக, அவர்கள் வங்கியின் ஊழியர்களைச் சார்ந்து இருக்கத் தேவையில்லை. தனது 65 வது ஆண்டு நினைவு நாளில் SBI வங்கி, இந்த கிளைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்ற கிளைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் திறக்க வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்த வசதிகள் கிடைக்கும்:
தகவல்களின்படி, நீங்கள் யோனோ (SBI YONO) மற்றும் பிற டிஜிட்டல் (SBI Digital) பயன்பாடு மற்றும் வங்கியின் சேவைகள் தொடர்பான தகவல்களை யோனோ கிளையில் உள்ள வீடியோ சுவரில் பெற முடியும். இது தவிர, கிளை ஊழியர்களிடம் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பேச ஆலோசனை கிடைக்கும். 

READ | அறிந்துக்கொள்வோம்: இனி வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை திறக்கலாம்; எப்படி?

READ | SBI வாடிக்கையாளர்களே... இனி Online-ல் பணம் அனுப்புவதற்கு முன் இதை கவனியுங்கள்

அதேநேரத்தில் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம், சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ இன்ஸ்டா சேவிங் வங்கி கணக்கு சேவையைத் தொடங்கியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் யோனோ பயன்பாட்டின் மூலம் உடனடியாக ஆன்லைனில் வங்கி கணக்கு திறக்க முடியும்.

5.1 மில்லியன் பதிவிறக்கங்கள்:
யோனோ பயன்பாடு இங்கிலாந்து, மொரீஷியஸ் மற்றும் நமது நாட்டிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. யோனோ (YONO Apps) பயன்பாட்டில் இதுவரை 5.1 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 24 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். யோனோ பல இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.

Trending News