MDMK Principal Secretary Durai Vaiko: திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, இந்தமுறை திருச்சி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ நிறுத்தப்பட்டு உள்ளார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக ம.தி.மு.க அறிவித்தது. மேலும் தங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சார்பில் கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் ம.தி.மு.க.,வினர் கேட்ட பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து நீதிமன்றம் கதவை தட்டினார்கள் ம.தி.மு.க.,வினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் சொன்னதையே பரிந்துரை செய்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தான் கூறியுள்ளது. நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே. ம.தி.மு.க., போட்டியிட்ட சின்னத்தை, பொது சின்னமாக வைக்காமல், ‘லாக்’ செய்து வைத்துள்ளனர். தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அதை ‘ரிலீஸ்’ செய்து விட்டால், ம.தி.மு.க.,வுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கேட்டோம். சட்டப்படி சின்னத்தை கொடுக்க முடியும் என்றாலும், அதனால், சில பிரச்னைகள் வரும். அதுவே தவறான முன் உதாரணமாகி விடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் படிக்க - கரூர் நாடாளுமன்ற தொகுதி: முன்னாள் அதிமுக அமைச்சர் தீவிர பிரச்சாரம்
தேர்தல் விதிமுறைகள்படி, சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி, மீண்டும் அந்த சின்னத்தை கேட்டோம். ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவைத் தான், நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு, மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் துவங்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில், இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.
இதற்கு மாற்றாக வேறு இரண்டு சின்னங்கள் தேர்வு செய்து, அதில் ஏதேனும் ஒன்றை பெற்று, அதில் போட்டியிடுவோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த காலங்களை போல், இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு, ஓட்டு போடும் அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால், 24 மணி நேரத்தில், சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.
மதவாத பா.ஜ., கட்சியை எதிர்க்கும் உண்மையான அணியாக தி.மு.க., கூட்டணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளரையும், அவரது சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். இதனால், சின்னத்தை பொருத்தவரை எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
மேலும் படிக்க - தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி: அண்ணாமலை
கடந்த தேர்தல்களில், சில தலைவர்கள், புதிய சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மதவாத பா.ஜ., வந்து விடக் கூடாது, என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி, அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி (என்டிகே) என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024 முழு விவரம்
இந்தமுறை நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க - என்னடா இது ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை.. ஒரே பெயரில் 5 பேர் போட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ