மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் செம்பனார்கோவில் பள்ளி தாளாளர் குடியரசு, ஶ்ரீநிவாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஶ்ரீநிவாஸ்சுக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இந்நிலையில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 75 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான ஸ்ரீநிவாஸ் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்படி இரு நபர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க வேண்டுமென வினோத் மற்றும் விக்னேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டாக்டர். இராம. சேயோன் ஆஜராகி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கில் சம்மந்தப்பட்ட குடியரசு மற்றும் அகோரம் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நான்காவது முறை ஜாமீன் கேட்டு சென்றவாரம் விண்ணப்பித்தபோது இருந்த நிலவரத்தில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை (THERE IS NO CHANGE IN CIRCUMSTANCES) என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டுமென்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனபதால் உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மேற்படி இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி, சென்ற வாரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கும் தற்போதைய ஜாமீன் மனுவிற்கும் இடைப்பட்ட காலத்தில் வழக்கில் எந்த மாற்றமும் இல்லை, ஏனைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும். வழக்கின் விசாரணை முற்றுபெறவில்லை ஆகிய அரசு தரப்பு வாதங்களை ஏற்று இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ