ஒன்றாகக் கூட வேண்டாம், வீடுகளில் கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள் என மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2021, 04:01 PM IST
ஒன்றாகக் கூட வேண்டாம், வீடுகளில் கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் title=

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 2 வெளியாக உள்ளது. இதற்கான பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று பல்வேறு கருத்துக்கணிப்பு அமைப்புகளால் வெளியிட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் (Exit Polls) தெரிவுக்கப்பட்டுள்ளன.

அனைத்து கருத்துக்கணிபுகளிலும், திமுக (DMK) அதிக வித்தியாசத்துடன் வெற்றி பெறுவதை கண்கூடாகக் காண முடிந்தது. அதிமுக-வுக்கு (AIADMK) கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தரும் நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin),

ALSO READ | தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: ஆன்லைனில் RESULT ஐ எப்படி பார்ப்பது!

கட்சியினரும், தொண்டர்களும் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள். தேர்தல் முடிவுகளை (TN Assembly Election 2021) ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள் என கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தேர்தலில் வெற்றி உறுதியானாலும் தேவையின்றி ஒன்றாகக் கூட வேண்டாம். தெருக்களில் வெற்றியை கொண்டாட வேண்டாம், வீட்டிற்குள் கொண்டாடுங்கள். கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக (Tamil Nadu) சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள் குறித்த தகவல்களை நீங்கள் இங்கே பார்வையிடலாம்.

* ELECTION COMMISSION OF INDIA என்ற பக்கத்தில் நீங்கள் ELECTION RESULT PORTAL இல் காணலாம்.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகளின் ஒரு பக்கத்தை ஆணையம் அமைத்துள்ளது, இது வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் காலை 8 மணி முதல் செயல்படத் தொடங்கும்.

* ELECTION COMMISSION OF INDIA பக்கத்தில் VOTER HELPLINE APP இல் தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் காணலாம். 
தேர்தல் முடிவுகளை வழங்கும் வாக்காளர் ஹெல்ப்லைன் என்ற பயன்பாட்டையும் ECI இயக்குகிறது, இது பல பயனுள்ள தகவல்களுக்கிடையில் உள்ளது. பயன்பாடு Android மற்றும் iOS இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News