அணை பாதுகாப்பு மசோதா குறித்து மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்ககோரி சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

Updated: Jul 20, 2019, 11:38 AM IST
அணை பாதுகாப்பு மசோதா குறித்து மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்ககோரி சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அணை பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாதுகாப்பு என்ற எயரில் அணைகளை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே, இந்த மசோதாவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அணை பாதுகாப்பு என்ற பெயரில் மாநிலங்களிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயற்சி என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல. இந்த மசோதாவை திரும்பப் பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். நான்கு அணைகள் மீதான தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தமிழக அரசு குரல் கொடுக்கும். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தும் என குறிப்பிட்டார்.