தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 489 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்!!
தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்வு.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... மாநிலத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 3 பேரில் இருவர் சென்னையிலும், ஒருவர் திருவள்ளூரிலும் உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் குணமாகி 489 பேர் வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமானோர் எண்ணிக்கை 5,895 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் மொத்தம் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் 40 அரசு மையங்கள்; 23 தனியார் பரிசோதனை மையங்கள். தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் ஆண்கள் 407; பெண்கள் 281; இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 8,054 ; பெண்கள்- 4,391; மூன்றாம் பாலினத்தவர்- 3.