தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு..!

Updated: May 23, 2020, 07:13 PM IST
தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்வு. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.... மாநிலத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 15,512 ஆக அதிகரித்துள்ளது. இதில், மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டில்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர், குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும். 

இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Image

Image

இன்று செங்கல்பட்டில் மொத்தம் 39 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 733 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் மற்றும் மதுரையில் இன்று ஒருவருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் 423 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Image

ராணிப்பேட்டையில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தேனியில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 85 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் இன்று 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 697 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 326 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.