தமிழகத்தில் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்த நிலையில் 1128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. அதில், சுமார் 1,392 ஆண்களும், 666 பெண்களும் அடங்வர். இன்று மட்டும் சுமார் 7,093 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், வீட்டுக்கண்காணிப்பில் 30,692 பேரும், அரசு கண்காணிப்பில் 47 பேரும் உள்ளனர். இந்நிலையில், 27 பேர் பாதிப்பு குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கும் மற்றும் 1 வயதான இரண்டு குழந்தைக்கும் வைரஸ் பாதித்துள்ளது.
இதை தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் 68 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பாதிக்கபட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கபட்டவர்களைன் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சென்னை உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். செங்கல்பட்டில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், நாமக்கலில் 2 பேர், காஞ்சிபுரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
District
|
Confirmed
|
|||
Chennai | 103678 | |||
Coimbatore | 141 | |||
Tiruppur | 112 | |||
Dindigul | 80 | |||
Madurai | 79 | |||
Erode | 70 | |||
Chengalpattu | 1267 | |||
Tirunelveli | 65 | |||
Namakkal | 261 | |||
Thiruvallur | 54 | |||
Thanjavur | 54 | |||
Viluppuram | 52 | |||
Tiruchirappalli | 51 | |||
Theni | 44 | |||
Nagapattinam | 44 | |||
Karur | 41 | |||
Ranipet | 38 | |||
Tenkasi | 35 | |||
Virudhunagar | 32 | |||
Salem | 31 | |||
Thiruvarur | 30 | |||
Thoothukkudi | 27 | |||
Cuddalore | 26 | |||
Vellore | 23 | |||
Kancheepuram | 119 | |||
Tirupathur | 18 | |||
Kanniyakumari | 16 | |||
Ramanathapuram | 15 | |||
Sivaganga | 12 | |||
Tiruvannamalai | 11 | |||
The Nilgiris | 9 | |||
Kallakurichi | 39 | |||
Perambalur | 7 | |||
Ariyalur | 5 | |||
Pudukkottai | 1 | |||
Dharmapuri | 1 |
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ள 2,058 பேரில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 121 பேரும், 13 முதல் 60 வயதுடையவர்கள் 1697 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 240 பேரும் உள்ளனர்.