தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது: செங்கோட்டையன்!

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை... 

Last Updated : May 27, 2020, 01:31 PM IST
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது:  செங்கோட்டையன்! title=

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை... 

சென்னை: ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்.... ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைதுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து குழு தரும் அறிக்கையை வைத்து முடிவெடுக்கப்படும் என்றார். முன்னதாக, கரோனா எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகும் என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே ஒரு சில மணி நேரம் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் படிப்பதற்கு இணையவழி வகுப்புகள் உகந்த சூழலாக இருக்காது என அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

Trending News