சொத்துகுவிப்பு வழக்கு: தீர்ப்பும், அரங்கேறிய காட்சிகள்

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணிக்கு பரபரப்புடன் துவங்கிய பரபரப்பு நள்ளிரவு வரை தொடர்ந்தது. 

Last Updated : Feb 15, 2017, 08:40 AM IST
சொத்துகுவிப்பு வழக்கு: தீர்ப்பும், அரங்கேறிய காட்சிகள் title=

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணிக்கு பரபரப்புடன் துவங்கிய பரபரப்பு நள்ளிரவு வரை தொடர்ந்தது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. ஜெயலலிதா மறைந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்ராஜ், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் ஆகியோர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரவித்தனர். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.

கட்சி நலன் கருதி முடிவெடுக்கும் படியும் ஒன்றாக செயல்பட கோரியும் படி சசி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஓ. பன்னீர்செல்லம் அழைப்பு விடுத்தார்,

கூவத்தூர் சொகுகு விடுதியில் சசிகலா தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்தேடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அதிமுக-வின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. 

ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதரவு தெரிவத்த எம்.எல்.ஏ., அமைச்சர் குழுவினர் 19 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள கூவத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் தொலைபேசியில் தமிழக சட்ட ஒழுங்கு பற்றி ஆலோசனை நடத்தினார். 

எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அமைச்சர்களுடன் சேர்ந்து கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பு 10 நிமிடத்தில் முடிந்தது. 

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் கவர்னர் வித்யாசாகராவை சந்தித்தனர். சந்திப்பின் போது சட்டசபையில் ஓ. பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பு தர கோரியதாக தகவல் வெளியானது.

கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரனுடன் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். 

இரவு 9.30 மணிக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இருவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இரவு 9.40 மணிக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் கூவத்தூர் சொகுசு விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்த சசிகலா, கூவத்தூரிலிருந்து போயஸ் இல்லம் புறப்பட்டார்.

தீபா முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்றார். அங்கு தீபாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. ‛எனது அரசியல் பிரவேசம் இன்று முதல் துவங்குகிறது. நானும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக-வின் இரு கரங்களாக செயல்படுவோம்' என தீபா கூறினார்.

போயஸ் இல்லத்திற்கு வந்த சசிகலா செய்தியாளர்களிடம் ‛நான் எதற்கும் பயப்படவில்லை; அனைவரும் தைரியமாக இருங்கள்' எனத் தெரிவித்தார். 

Trending News