சுதந்தர பொன்விழாவையொட்டி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பாஜகவைச் சேர்ந்த பலரும் வேண்டுகோள் வைத்துவருகின்றனர்.அதன்படி, தமிழ்நாட்டில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக மாவட்ட தலைவர்களிடம் தேசிய கொடிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா கட்சிகளும் கட்சி பேதமின்றி வீடுகளில் தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்க வேண்டும். பாஜக சார்பில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் பேசிய அவர், “கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரை வீடு புகுந்து வெளியே தூக்கி வந்ததை முதல் முதலில் கண்டித்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய். இப்போது விசாரணைக்காகத்தான் சம்மன் வழங்கி சோனியாவை அழைத்துள்ளார்கள். அதற்காக ரோடுகளை மறிப்பதுதான் ஜனநாயகமா? எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. தமிழக அரசின் மீதான நம்பகத்தன்மையும், ஆவின் பால் அளவும் குறைந்து விட்டது. பாலின் அளவை குறைத்து ஆவின் நிறுவனத்தில் மிகப்பெரிய மோசடி செய்துள்ளார்கள்.
மேலும் படிக்க | அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 70 மில்லி பாலை குறைத்து 430 மில்லி பால் மட்டும் வழங்கி இருக்கிறார்கள். தினமும் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அளவை குறைத்ததன் மூலம் ஒரு கவர் பாலுக்கு 3 ரூபாய் 8 காசுகள் குறைய வேண்டும். ஒவ்வொரு பால் பாக்கெட்டையும் பொதுமக்கள் சரி பார்ப்பது சாத்தியமில்லை. அந்த நம்பிக்கையில்தான் இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள். சட்டத்துக்கு புறம்பாக சுருட்டப்பட்ட இந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது? வழக்கம்போல் அதிகாரிகள் மீது மட்டும் பழியை போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் இப்படி விதவிதமான புதிய பாணியில் முறைகேடுகள் நடந்து கொண்டே வருகின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறது திமுக தமிழகத்தில் எப்படியெல்லாம் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஆளும் திமுக மக்களை ஏமாற்றுகிறது என்பதை நாடாளுமன்றத்தில் ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் பேசினார். ஆனால் அதை கேட்காமல் தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் வெளியேறினார்கள். அமலாக்கத் துறையின் விசாரணை பட்டியலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அமலாக்கத் துறையினர் விரைவில் விசாரிப்பார்கள்” என்றார்.
மேலும் படிக்க | தாய்ப்பாலில் நஞ்சைக் கலப்பதா ? - ஆற்றில் ரசாயனக் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ