பகீர் சம்பவம்: உணவில் விஷம் வைத்த மனைவி, தப்பிப்பிழைத்த கணவன்

கோவில்பட்டி அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவனை கொலை செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 10, 2021, 11:43 AM IST
பகீர் சம்பவம்: உணவில் விஷம் வைத்த மனைவி, தப்பிப்பிழைத்த கணவன்

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான உறவாக கருதப்படுகிறது. வாழ்க்கை முழுவதையும் ஒன்றாக கழிப்பதாக உறுதி எடுத்து திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பல ஜோடிகளின் இந்த உறுதி சில சமயம் நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை.

அப்படி, திருமணம் (Marriage) திகட்டிப்போய் தப்பிழைக்க வைத்த ஒரு சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது.

கோவில்பட்டி அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவனை கொலை செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையாவின் மகன் 32 வயதான மாடசாமி. இவரது மனைவி  28 வயதான இந்திரா. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகிறது. 

ALSO READ:பகீர் தகவல்! கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை..!! 

இவர்களுக்கு வைத்திஷினி(12) மற்றும் முகாசினி என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக மாடசாமி  கடந்த சில மாதங்களாக இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயல்களால் விரக்தி அடைந்த இந்திரா விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை உணவில் கலந்து மாடசாமிக்கு கொடுத்துள்ளார். 

உணவில் களைக்கொல்லி மருந்து வாசம் வருவதை உணர்ந்த மாடசாமி அருகிலிருந்தவர்களிடம் உணவை காட்டிய போது உணவில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் சோப்பு நுரையை கலக்கி மாடசாமிக்கு கொடுத்து முதலுதவி செய்து சிகிச்சைக்காக எட்டயாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் (Police) மாடசாமி மனைவி இந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரின் செய்கையால் மனம் நொந்து, மனைவி உணவில் விஷ மருந்தினை கலந்து கொடுத்த சம்பவம் (Crime Incident) அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:கோவையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி விற்க முயன்ற 3 பேர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News