அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திநகர் சத்யாவின் இல்லத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது, இதில் சென்னையில் மட்டும் 16 இடங்களிலும் கோவை மற்றும் திருவள்ளூரில் தல ஒரு இடத்திலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் டி நகர் சத்யாவின் நெருங்கிய நண்பர் திலீப் குமார் என்பவருக்கு சொந்தமான யாமினி திருமண மண்டபம், ஏ எம் சி ரெசிடென்சி மற்றும் யாமினி புரமோட்டர்ஸ் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கு உலகளவில் Demand உள்ளது-செஃப் தாமு
அதில் குறிப்பாக யாமினி பிரமோட்டர்ஸ் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் கணினியில் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ஆரம்பாக்கம் பகுதி உட்பட 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் தொடர்ந்து 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. மேலும் டி நகர் சத்யநாராயணன் மற்றும் இவரது நண்பர் திலீப் குமார் ஆகியோருக்கு ஆரம்பாக்கம், ஆந்திர மாநிலம் பெரிய வேடு ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது இவ்விடங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் முன்னாள் அமைச்சர்கள் ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் அமைச்சர் பொறுப்பு இல்லாத சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்த ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை நடைபெறுவது இது முதல் முறை. மேலும் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷின் இல்லத்திலும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துடன் துவங்க இருக்கிற நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பில் அதை வலியுறுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கான தொகுதி பங்கீடு முடிந்திருக்கிற நிலையில் தமிழகத்திலும் தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்! டிக்கெட் புக் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ