Silambam: தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழ்நாட்டின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2021, 01:00 PM IST
  • வீர விளையாட்டு சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்
  • இனி சிலம்பத்தை மத்திய அரசும் ஊக்குவிக்கும்
  • பாரம்பரிய சிறப்பு கொண்ட தற்காப்பு கலைகளில் முக்கியமானது சிலம்பக் கலை
Silambam: தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் title=

தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மத்திய அரசின் அங்கீகாரம் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசின் அங்கீக்காரம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சிலம்பம் விளையாட்டை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிலம்பம் விளையாட்டினை கேலா இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீரித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் விளையாட்டுத்துறையின் இந்தஅங்கீகாரமானது, விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல் என்பதன் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
இந்த அங்கீகாரம் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

silambam
சிலம்பம் என்பது தமிழர்களின் பிரத்யேக தற்காப்புக் கலை மற்றும் வீர விளையாட்டு ஆகும். பேச்சு வழக்கில் கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கப்படும் சிலம்ப விளையாட்டில், சிலம்பத் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் ஒருவர் தன்னை பாதுகாத்து கொள்ள முடியும். 

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகும். சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொடுப்பதற்கக சிலம்பாட்டக் கழகங்கள் பல உள்ளன. ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே கற்றுக் கொண்ட சிலம்பம் சுற்றும் கலையை தற்காலத்தில் பெண்களும் கற்றுக் கொள்கின்றனர்.

Also Read | சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்

தமிழகத்தில், திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் இடம் பெறும். திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிலம்பாட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒலித்தல் என்று பொருள்படும் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது சிலம்பம் என்ற பெயர். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்று பெயர் பெற்ற வீர விளையாடு இது. கம்பு சுற்றுதல் என்ற பெயரிலும் பல இடங்களில் சிலம்பம் அறியப்படுகிறது.

சுமார் 5000 ஆண்டுகள் பழமையான வீர விளையாட்டு சிலம்பம். ஆயக்கலைகள் 64இல் ஒன்றாக சிலம்பமும் பட்டியலிடப்பட்டுள்ளது.  சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் பற்றி கூறப்படுகிறது.  

READ ALSO | 75 வயது மூதாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News