தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தமிழ் புத்தாண்டு திருநாளான சித்திரை ஒன்றாம் தேதியான இன்று மக்கள் அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.தொடர்ந்து மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர்.
தமிழ் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | சுபகிருது தமிழ் புத்தாண்டு யாருக்கு என்ன செய்தியை சொல்கிறது? மேஷத்திற்கு மோசமில்லை
அந்த வகையில் கோவை கோவை காட்டூர் பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று சித்திரை முதல் நாள் என்பதால் அனைவரும் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க | கோப மிகுதியால் பணியிலும், வாழ்விலும் தோல்வியை சந்திக்கும் ராசிகள் இவைதான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR