கோவை மதுக்கரை பகுதியில் நடமாடும் உணவு வாகனத்தை தமிழக வெற்றிக்கழக தேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆரம்பித்து வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கோவை தெற்கு மாவட்டத்திலேயே இரண்டு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு எங்கள் தலைவருடன் கலந்த ஆலோசித்து அதற்குண்டான விவரங்களை தெளிவாக கூறுவோம். தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம், இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அவர் எந்த இடத்தை தேர்வு செய்வார். மேலும் மிக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | அண்ணாமலையின் மிகப்பெரிய சாதனை! நக்கலடித்த காங்கிரஸ் தலைவர்!
கடந்த பிப்ரவரி மாதம் விஜய் புதிதாக கட்சி தொடங்கி தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளார். இன்னும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்படாததால் கட்சி கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படவில்லை. கட்சியின் அதிகார்வப்பூர்வ பொறுப்பாளர்களாக புஸ்ஸி ஆனந்த் மட்டுமே உள்ளார். அவரை தாண்டி கட்சியின் சார்பாக யாரும் முக்கிய பொறுப்பாளர்களாக இல்லை. கட்சி சம்பத்தப்பட்ட அனைத்திற்கும் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே பொறுப்பேற்று வருகிறார். தற்போது வரை தமிழக வெற்றி கழகம் எந்தவித பிரச்சனைகளுக்கும் முன்னின்று பேசவில்லை. சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்து வருகிறார்.
நான் இருப்பது பொதுச் செயலாளர் பதவி மட்டுமே
நான் இருப்பது பொதுச் செயலாளர் என்ற பதவி தான். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமே என்னுடைய பணி. அறிவிப்புகள் அனைத்துமே தலைவர் தான் முடிவு எடுப்பார் என்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்து சமீபத்தில் கூறி உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கழக மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, நகரம், ஒன்றியம் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் அஞ்சலை அம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தமிழக வெற்றிக் கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் தெரிந்ததாகும். அதனை கண்டிப்பாக தெரிவிப்போம். பொதுச் செயலாளர் என்பது தலைவருக்கு அடுத்த பதவியாகும்.
ஆனால் எங்கள் தலைவராக இருக்கும் விஜய் தான் கட்சி தொடர்பாக தெரிவிப்பார். நான் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றேன். ஆகையால் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தளபதி விலையில்லா விருந்தகம், ரொட்டி, பால், முட்டை திட்டம், தளபதி பயிலகம், இலவச சட்ட ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தினந்தோறும் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ