சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம்: EPS

கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியர் நாகராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2018, 04:36 PM IST
சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம்: EPS title=

கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியர் நாகராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! 

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடந்து கடந்த 16 ஆம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த 20 ஆம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதலவர் தெரிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து, கஜா புயல் நிவாரண பணிக்காக திருவாரூர் வந்த நாகராஜன் பனியின் பொது மாரடைப்பின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு தமிழக அமைச்சர் காமராஜர், சரோஜா ஆகியோர் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணியின்போது மரணமடைந்த அரசு ஊழியர் நாகராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், நாகராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு நிறுவனத்தில் பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

Trending News