ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்.,
‘அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் சென்னையில் தனது மன்ற செயலாளர்களுடன் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்., தனது அரசியல் நிலைபாடு குறித்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது அவர் தான் முதல்வராக எப்போது ஆசை பட்டது இல்லை எனவும், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற கருத்தின் அடிப்படையில் தான் செயல்பட விரும்பியதாகவும், அதற்கான வலுவான கட்சியை நாம் அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்— Rajinikanth (@rajinikanth) March 14, 2020
மேலும் தற்போது தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிறப்ப வலுவான தலைமை கொண்டுவருவது நமது பொறுப்பு, அதற்காக மக்கள் எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் அந்ந எழுச்சி வந்த பின்னர் தான் தனது அரசியில் பயணத்தை தொடருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்தினை பாமர மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது ட்விட்டர் பதிவில் அவர் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.