வரும் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழிக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

Last Updated : Jul 26, 2020, 09:09 AM IST
வரும் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை title=

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பாக தமிழகத்தில் உயர்ந்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று மேலும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது. 

அந்தகவையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6 ஆம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மேலும் இந்த 6 ஆம் கட்ட ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

 

ALSO READ | Tamil Nadu Lockdown News: இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் முழு ஊரடங்கு

இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

 

ALSO READ | இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,988 பேருக்கு கொரோனா உறுதி..!

இதற்கிடையில் தமிழகத்தில் 115 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 57) உள்ளன. அதில், நேற்று மட்டும் 64,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22,87,334 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,25,553 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 81,161 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் உள்ளனர். 

Trending News