மேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: OPS

நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Nov 20, 2019, 05:23 PM IST
மேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: OPS title=

நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.   
 
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவிடம் இருந்து 25% இடங்களை கேட்க முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜக குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தேமுதிகவும் 3 இடங்களை கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினியுடன், கமல் இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை" என்றார்.

பின் மதுரை விமான நிலையத்தில் பேசிய ஓபிஎஸ், "தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக அமெரிக்க தொழில் அதிபர்களிடம் பேசியுள்ளோம். 58ம் கால்வாய் தொடர்பாக கருணாநிதி ஆட்சி காலத்தில் தவறான அறிக்கை வெளியிட்டனர். அதை எவ்வாறு சரிசெய்து என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் சில இடங்களை கேட்பார்கள். அனைவரும் இணைந்து ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.  

 

Trending News