கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர் 55 வயதான கணேசன். இவரது மனைவி 50 வயதான பொன்னுத்தாயி. பரமக்குடியை பூர்விகமாக கொண்ட இருவரும் கடந்த 22 வருடங்களாக கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். டீக்கடை ஒன்றில் வேலை செய்துவரும் கணேசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள சொத்தை விற்று தரும்படி அடிக்கடி தனது மனைவியிடம் சண்டையிட்டு உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விரோதிகளாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று அதே போல சொத்தை விற்று பணத்தை கொடுக்க சொல்லி பொன்னுத்தாயிடம் கணேசம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவர்களின் மகனான மதன்குமார், இருவரையும் சமாதானம் செய்து விட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அப்போது தனது தாய் வேலை முடிந்து வீடு திரும்பிய மதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னுத்தாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்க்கும்போது உடல் முழுக்க வெட்டுக்காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்திருக்கிறார். அவர் அருகே கையில் அரிவாளோடு கணேசன் கொலை வெறியில் நின்றிருந்தார். அதிர்ச்சியில் உறைந்து போன மகன் மதன்குமார் கத்தி கூச்சலிட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது, ஆம் பொன்னுத்தாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
மேலும் படிக்க | இருளர் இன மக்கள் இனி பாம்பு பிடிக்கலாம் - தமிழக அரசு
கணேசனை பிடிக்க முற்பட்ட போது அரிவாளை காட்டி மிரட்டியவர் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்காநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கணேசனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சொத்து பிரச்சினையில் மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததை கணேசன் ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR