ADMK : உறுப்பினர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள் : ஓபிஎஸ்-க்கு நீதிமன்றம் கண்டனம்

OPS vs EPS : பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 11, 2022, 12:04 PM IST
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீதிமன்றம் கண்டனம்
  • தொண்டர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வலியுறுத்தல்
ADMK : உறுப்பினர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள் : ஓபிஎஸ்-க்கு நீதிமன்றம் கண்டனம் title=

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்த வில்லை என்றால்  அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்!

பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை எனவும், 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும் எனவும், பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் எனவும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவது துரதிருஷ்டவசமானது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ் அதிரடி! அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்!

பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது எனவும் கூறி, மனுக்களை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News