ஜெயலலிதாவை வைத்து டிடிவி தினகரன் குடும்பம் கொள்ளையடித்தது - திண்டுக்கல் சீனிவாசன்!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டிடிவி தினகரன் குடும்பம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2023, 10:34 PM IST
  • ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு.
  • எதெற்கெடுத்தாலும் போராடும் கம்யூனிஸ்டு எங்கே?
  • சிவகாசியில் திண்டுக்கல் சீனிவாசன் கட்டமாக விமர்சனம்.
ஜெயலலிதாவை வைத்து டிடிவி தினகரன் குடும்பம் கொள்ளையடித்தது - திண்டுக்கல் சீனிவாசன்! title=

வருகிற ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டில் பங்கேற்பது குறித்த விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, கே.பி. முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஆர். பி. உதயகுமார், செல்லூர்ராஜு, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம், மாபா பாண்டியராஜன், இன்பத்தமிழன் ஆகியோருடன், அதிமுக மாநில நிர்வாகிகளோடு, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதாவது:- கட்சி அமைப்பிலே, கட்டமைப்பிலே, நிர்வாகத்திலே தனக்கு தான் பெரும்பான்மையான ஆதரவு உள்ளதாக கூறிய ஓபிஎஸ்,  அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்ஐ மட்டுமே ஏற்றுக் கொள்வதாக கூறியதை, குறை ஏற்பட்டது, திருத்தப்பட்டது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை தெரியுமா? அமித்ஷா சொன்ன காரணம்

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியனவைகள் பொதுச்செயலாளர் எடப்பாடி அணிதான் அதிமுக என்றனர். அதனையும் ஏற்றுக் கொள்ளாத ஓபிஎஸ், தற்போது தொண்டர்கள் ஆதரவு எனக்கு மட்டும்தான் உள்ளது என்கிறார். இவர் இப்படி பேசுவது வடிவேலு காமெடி பாணியில் இயக்குனர் சுந்தர். சியிடம் தெருவுக்கு வா பார்த்துக் கொள்வோம், வீட்டுக்கு வா பார்த்துக் கொள்வோம் என்பது போல் உள்ளது. எதிரிகளுக்கு நம்மைப் பற்றி தெரியும். ஆனால் அதிமுகவை அழித்து விடலாம் என்ற பச்சோந்திகளுக்கும், துரோகிகளுக்கும் எதிரானது இந்த மாநாடு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது:- 3 முறைகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முதல்வராக அமரவைக்கப்பட்ட நன்றி கெட்ட துரோகி உன்னால் நிலைத்து நிற்க முடிந்ததா? என ஓபிஎஸ்-க்கு சவால் விடுத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து டி.டி.வி.தினகரன் குடும்பமே கொள்ளையடித்தது.  டிடிவியால் தஞ்சாவூர் மண்ணில் தனது சக்தியை காட்ட முடியுமா? எதற்கெடுத்தாலும் போராடி உண்டியல் குலுக்கும்  கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்கே? என்று காமெடி பேசி கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சிரிக்க வைத்தார். பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தை பார்த்து அங்கே என்ன சண்டை, இங்கு என்ன சலசலப்பு, கூட்டம் நடந்த அரங்கின் கதவுகளை ஏன் திறக்கிறீர்கள்? என அடிக்கடி கேள்வி கேட்டு தண்ணீர் தாகத்தால் குடிநீர் வாங்கி வாங்கி குடித்தார். கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க ஆவலோடு காத்திருந்த  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன் மற்றும் இன்பத்தமிழன் ஆகியோர் கூட்ட அரங்கு மேடையில் பேச விடாமல் கூட்ட ஏற்பாட்டாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். புறக்கணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் படிக்க | அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News