ஓபிஎஸ் ஒரு சிங்கம்...திமுகவை முடித்துவிடுவார் செந்தில்பாலாஜி: டிடிவி தினகரனின் ஆவேசம்

திமுகவை முடிக்க செந்தில்பாலாஜி ஒருவர் போதும் எனக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவில் இருக்கும் சிங்கம் ஓபிஎஸ் என தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 16, 2022, 11:08 AM IST
  • டிடிவி தினகரனின் சரமாரி குற்றச்சாட்டு
  • அதிமுக தோல்விக்கு எடப்பாடியே காரணம்
  • திமுகவை முடித்துவிடுவார் செந்தில் பாலாஜி
ஓபிஎஸ் ஒரு சிங்கம்...திமுகவை முடித்துவிடுவார் செந்தில்பாலாஜி: டிடிவி தினகரனின் ஆவேசம் title=

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "தாய் தான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்க முடியும். ஆனால், அண்ணா ஒருவர்தான் தன் தாய் நாட்டிற்கு பெயர் வைத்தவர். கருணாநிதி ஆட்சி காலத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றது. தற்போது ஸ்டாலின் ஆட்சியில் மின் கட்டண உயர்வு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. 

செந்தில் பாலாஜி ஒருவர் போதும் திமுகவை முடித்து விடுவார். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஹிட்லரையே மிஞ்சிவிடும் அளவிற்கு பணியாற்றி வருகிறார். மின் கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு குறித்து கூட்டணி கட்சிகள் மௌனம் காத்து வருகின்றனர். கூண்டோடு அவர்கள் தோல்வியை சந்திப்பர். தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையாததற்கு எடப்பாடி பழனிச்சாமி 100% பொறுப்பு. மீண்டும் தலைமை குழு கூடி முடிவெடுத்து பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினையே கூட பொதுச்செயலாளராகவும் அறிவிப்பார்கள். 

எம்ஜிஆரால் துவங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட ஜாதி மதம் கடந்த கட்சியை தற்போது வட்டார கட்சியாக மாற்றி இருக்கின்றனர். பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் , மனோஜ் பாண்டியன் போன்ற சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் இருக்கின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நரிகளாக அனைவரும் மாறிவிட்டனர். முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களால் அடுத்த தேர்தலுக்கு அவர்கள் இருப்பார்களா என்பதே கேள்விக்குறி?. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது கணக்கை துவங்குவோம். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் நாம் இருப்போம்" என பேசினார். 

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு தடை! ஜி ஸ்கொயர் குறித்து பேசக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும் படிக்க | சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News