H Raja Slams DMK: ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ ராஜ மாதங்கி மகா யாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, "சனாதன தர்மம் குறித்து கீதையை வகுத்த கிருஷ்ணரும், திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும், எந்த இடத்திலும் தவறுதலாக தெரிவிக்கவில்லை.
உதயநிதி சிறை செல்வார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புரிதலின்றி சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆ ராசா உள்ளிட்டோர் பேசுவது கண்டிக்கத்தக்கது. மேலும் உதயநிதி பேசுவதற்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இன்னும் 21 நாட்களிலேயே சிறை செல்லுவார்.
தமிழகத்தில் இந்துக்களுக்கும், இந்து இல்லாதவர்களுக்கும் இடையே, கலகத்தை ஏற்படுத்த உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா போன்றவர்கள் முயற்சிப்பதை, தேர்தல் அரசியல் மூலம் மக்கள் மத்தியில் பாஜக கொண்டு சென்று வெற்றி பெறும்" என்றார்.
மேலும் படிக்க | காங்கிரஸா? திமுகவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் கமல் - அண்ணாமலை!
சிறுபான்மையினர் வாக்கு
அதிமுக - பாஜக இடையான கூட்டணி முறிவு ஏற்பட்டதை, சிறுபான்மை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் தெரிவித்ததாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்பதை நான் பிரித்துப் பார்க்கவில்லை. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதும் திமுகவுடன் கூட்டணி வைத்த போதும் பெரிய அளவில் தான் வெற்றி பெற்றோம் என்பதால், சிறுபான்மையினர் வாக்கு பிரச்சனையா இல்லையா அல்லது கூட்டணிக்கு வாக்களித்தார்களா என்பது தெரியவில்லை. அதிமுக - பாஜக இடையான கூட்டணி முடிவு குறித்து தேசிய பாரதிய ஜனதா கட்சி ஓரிரு தினங்களில் தனது கருத்துக்களை தெரிவிக்கும்.
தமிழகத்திற்கு பாஜக துரோகம் செய்யாது
தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை அதிகரிப்பது புகாரின் அடிப்படையிலேயே. விசாரணை முடிவில் நீதிமன்றத்தின் மூலம் அமலாக்கத்துறைக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அமலாக்க துறையின் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை இந்திய தண்டனைச் சட்டத்திற்கு உள்ளது. தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பதால், பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் தமிழகத்திற்கு தீங்கு இழைக்காது" என்றார். கடந்த செப். 25ஆம் தேதி அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | செல்போன் வெடித்து பெண் பலி... சார்ஜ் போட்டு பேசாதீங்க மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ