அரசியலில் விஜய்யை ஆதரிப்பீர்களா? கேள்விக்கு சரத்குமார் சொன்ன பதில்!

விஜய் கல்விக்காக உதவி செய்வது வரவேற்கத்தக்கது தான் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 18, 2023, 09:12 AM IST
  • நானும் நடிக்க வந்த காலத்தில் நிறைய உதவிகளை செய்தேன்.
  • 2026 தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என வகுத்துக் கொண்டிருக்கிறேன்.
  • ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம்.
அரசியலில் விஜய்யை ஆதரிப்பீர்களா? கேள்விக்கு சரத்குமார் சொன்ன பதில்! title=

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள், "நடிகர் விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார், இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்" என கேள்வி கேட்டதற்கு, எல்லா நடிகர்களும் தொடர்ந்து பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர், நானும் நடிக்க வந்த காலத்தில் இருந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது விஜய் கல்விக்காக உதவி செய்து வருகிறார் அது வரவேற்கத்தக்கது தான்.  "விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, நான் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறேன், 2026 தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன், எல்லாரும் அரசியலுக்கு வரலாம். 

மேலும் படிக்க | பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய்

ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம், இது சமத்துவ நாடு 14 வயசிலேயே பள்ளியிலேயே பாடத்திட்டத்தில் அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான், யார் வந்தாலும் சந்தோசம் மகிழ்ச்சிதான் எனக் கூறினார். செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை குறித்த கேள்விக்கு, உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார்.  சமத்துவ மக்கள் கட்சி சார்பாக 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளீர்கள் என கேள்விக்கு, 2026 ஆம் ஆண்டு ரொம்ப தூரம் உள்ளது, முதலில் நாளைக்கு இருப்போமா என்பதை பார்ப்போம் என்றார். 

மேலும், பாஜகவின் ஒன்பது கால ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் உதகையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசியவர் பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் முறையானதாக எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் பேசுகையில் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் தமிழக முதலமைச்சர் நேற்று அளித்த பேட்டியில் மிரட்டுகின்ற தோனியில் இருப்பதாகவும், இதே போல் பிஜேபி கட்சியினரை பார்த்து உங்களை விட மாட்டோம் என்று சொல்லி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி இருப்பதாகவும், இது மிகவும் கண்டனத்திற்குரியது துரதிஷ்டமானது. இதற்கு கடுமையான கண்டனங்களை பாஜக தெரிவிப்பதாகவும் கூறினார். ஏன் என்று சொன்னால் இது உச்ச நீதிமன்றம் நேரடியாக வழக்கு எடுத்து அதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து அவர்கள் மீது வழக்கை போட்டு அவர்களை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. 

இவர்கள் எங்களை மிரட்டவில்லை உச்சநீதிமன்றத்தை குற்றம் சாட்டுவதாகவும், அண்ணாமலை மிரட்டவில்லை அமித் சாவை மிரட்டவில்லை மோடியை மிரட்டவில்லை நேரடியாக உச்ச நீதிமன்றத்தை மிரட்டுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்றார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய் அரசியலுக்கு வருவதற்காகவா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஜனநாயக நாடு அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உள்ளது. ஆனால் களத்தில் நின்று மக்களுக்காக நிச்சயமாக போராடக்கூடிய குணம் படைத்தவர்கள் வரவேண்டும். உண்மையைச் சொன்னால்
நடிகர் விஜய் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசை பார்த்து தான் கேள்வி கேட்கிறார். நீங்கள் உங்கள் கண்ணையே குத்திக் கொள்கிறீர்கள் யாருக்காக ஓட்டளித்தீர்களோ அதே விரல் உங்கள் கண்ணை குத்துவதாகவும், அதனால் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து கூறியுள்ளார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News