மேட்டூர் அணையின் நிலவரம் என்ன? வெள்ள அபாயம் இருக்கிறதா?

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2019, 09:53 AM IST
மேட்டூர் அணையின் நிலவரம் என்ன? வெள்ள அபாயம் இருக்கிறதா? title=

புதுடெல்லி: மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக இருக்கும் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை 43வது முறையாக எட்டியுள்ளது. மேட்டூர் அணை மூலம் மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்ட பலன் அடைகின்றன. டெல்டா மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் பல மாவட்ட மக்கள் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்குகிறது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட அதிக அளவிலான நீரின் காரணமாக தமிழக எல்லையான பில்லிகுண்டுவுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 75,900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.740 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.654 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது.

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் 12 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றங்கரை ஓரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

Trending News