சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக கோடை விழாவிற்கு வரும் பயணிகளின் நலன் கருதி சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் "ஏற்காடு சூழலியல் சுற்றுலா" என்னும் சொகுசு வாகனச் சேவை இன்று (21.05.2023) ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் மூலம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் ஏற்காடு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 7.30 மணியளவில் சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் இரயில் நிலையம், ஐந்து ரோடு. அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடை உள்ளது.
மேலும் படிக்க | 'வேண்டுமென்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஓபிஎஸ்' - டிஜிபியிடம் மனு அளித்த ஜெயக்குமார்
ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதியில்லாமல்) ரூ.860/- (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) உட்பட, குளிர்சாதன வசதியுடன் ரூ.960/- நிர்ணயக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித பயணக் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அன்று மாலை 6 மணியளவில் ஏற்காட்டிலிருந்து புறப்பட்டு, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு கோடை விழாவிற்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் 8838018895, 7708086897 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு வாகனச் சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில், சேலம் ஏற்காடு மலைப்பாதையில் தொடர் விபத்துகளின் எதிரொலியாக ஏற்காடு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு பிரதான சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அனைத்து கனராக மற்றும் இலகுரக வாகனங்கள் அயோத்திய பட்டணத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு சென்று வருகிறது. இதனால் அயோத்தியபட்டணம் குப்பனூர் ஏற்காடு சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது. இந்த நிலையில் தொடர் விபத்துகளின் எதிரொலியாக, நடந்த விபத்துகளை ஆய்வு செய்ததில் வாகனங்களில் பிரேக் ஃபெயிலியர் காரணம் என தெரிய வந்துள்ளதால், ஏற்காட்டிற்குச் செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனையும் துறை சார்ந்த அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது - வைத்தியலிங்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ