என்எல்சி முற்றுகை: கர்நாடாகவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது தவாக போராட்டம்

தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடாகவுக்கு என்எல்சி-யில் இருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 10, 2018, 01:22 PM IST
என்எல்சி முற்றுகை: கர்நாடாகவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது தவாக போராட்டம் title=

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, இன்று (10- 04-2018) நெய்வேலியில் என்,எல்,சி, முற்றுகைப் போராட்டம். மற்றும் சென்னையில் நடைபெற இருக்கும் ஐ,பி,எல், முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு கூறியிருந்தார்.

இதையடுத்து, இன்று காலை முதல் நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் நெய்வேலியில் பரபரப்பான அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

Trending News