பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2024, 02:19 PM IST
  • 20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்
  • மார்க்கெட்டில் இருக்கும் பெஸ்ட் மொபைல்கள்
  • வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க உகந்த மாடல்கள் லிஸ்ட்
பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள் title=

நல்ல தரமான கேமரா மொபல் தேடுபவர்களுக்கு இப்போது மார்க்கெட்டில் நிறை ஆப்சன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மொபைல் மாடலிலும் ஒரு நிறை இருந்தால், ஒருகுறை இருக்கும். எனவே எந்த மொபைல் வேண்டும் என்பது அவரவர் விருப்பம் மற்றும் தேவை சார்ந்தது. இருப்பினும் நல்ல ஆப்சன்கள் இருக்கும் டாப் 5 மொபைல் மாடல்கள், அதுவும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருப்பதை இங்கே பார்க்கலாம். 

OnePlus Nord CE 3 Lite 5G ரூ. 19,499

பட்ஜெட் விலையில் உகந்த மொபைல் மாடலான இதில் கேமராவை பொறுத்தவரையில் EIS உடன் 108 MP முதன்மை கேமரா; 2MP டெப்த்-அசிஸ்ட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் இருக்கும். செல்பி கேமரா 16MP எம்பி. பின்புற கேமரா  108MP இருக்கும். லாஸ்லெஸ் ஜூம், புகைப்படம், வீடியோ, நைட்ஸ்கேப், நிபுணர், பனோரமிக், போர்ட்ரெய்ட், மேக்ரோ உள்ளிட்ட பல ஆப்சன்கள் இந்த கேமராவில் இருக்கிறது. Qualcomm Snapdragon 695 5G செயலியில் இயங்கும் OnePlus Nord CE 3 Lite 5G மொபைல் 5000 mAh உடன் 67W SUPERVOOC எண்டூரன்ஸ் பதிப்பு பேட்டரி இருக்கிறது.

POCO M6 Pro 5G ரூ. 9499

ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 செயலியில் இயங்கும் இந்த மொபைல், 4ஜிபி டர்போரேம் உட்பட 8ஜிபி ரேம் கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கூடிய பெரிய 17.24cm FHD+ 90Hz AdaptiveSync டிஸ்ப்ளே இருக்கிறது. கேமரா பொறுத்தவரையில் 50MP f/1.8 AI இரட்டை கேமரா, கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள், ஃபிலிம் ஃபிரேம், போர்ட்ரெய்ட், நைட் மோட், 50MP மோட், டைம் லேப்ஸ், கூகுள் லென்ஸ் | 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கும். 22.5W சார்ஜர் இன்-பாக்ஸுடன் 5000mAh(வகை) பேட்டரி இருக்கிறது. 

மேலும் படிக்க | கூகுள் டிவி செயலியை டிவி ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்

Redmi 12 5G ரூ. 11,999

ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 மொபைல் இயங்குதளம் கொண்ட இந்த மொபைல் 4ஜிபி விர்ச்சுவல் உட்பட 8ஜிபி ரேம் கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கூடிய பெரிய 17.24cm FHD+ 90Hz AdaptiveSync டிஸ்ப்ளே இருக்கும். கேமரா பொறுத்தவரையில் 50MP f/1.8 AI இரட்டை கேமரா, கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள், ஃபிலிம் ஃபிரேம், போர்ட்ரெய்ட், நைட் மோட், 50MP மோட், டைம் லேப்ஸ், கூகுள் லென்ஸ் | 8எம்பி செல்ஃபி கேமரா உள்ள மொபைல் இது. 22.5W சார்ஜர் இன்-பாக்ஸுடன் 5000mAh(typ) பேட்டரி இருக்கும்.

iQOO Z6 Lite 5G ரூ. 11,999

உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 செயலி கொண்ட மொபைல். 120Hz திரை புதுப்பிப்பு வீதம் உள்ள ஸ்கிரீன் மற்றும் 5000mAh பேட்டரி இருக்கும். இந்த மொபைல் கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்திற்கு சிறந்தது. 50எம்பி கண் ஆட்டோஃபோகஸ் உள்ள வகையில் பிரதான கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. 

லாவா அக்னி 2 5ஜி விலை ரூ. 16,999

Widevine L1 DRM பாதுகாப்புடன் 17.22cm (6.78″) 120Hz FHD+ வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல் Octa-core 2.6GHz MediaTek Dimensity 7050 6nm ப்ராசஸருடன் சிறந்த செயல்திறன் கொண்ட மொபைல் இது. சூப்பர்ஃபாஸ்ட் 66W சார்ஜர். அதாவது 16 நிமிடங்களுக்குள் 50% சார்ஜ் ஆகும். பெரிய 1.0µm பிக்சல் 50MP குவாட் கேமரா 8MP அல்ட்ராவைடு, 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் கேமரா மற்றும் 1.0µm 16MP செல்ஃபி கேமரா இருக்கிறது. உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் மொபைல்களை தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் - மாணவர்களுக்கு ஏற்ற பிராட் பிராண்ட் சேவைகள்... முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News